யுகபாரதி

'இனியவனின் நகரத்தின் கதவுகள் கவிதை தொகுப்பை வாசித்தேன் ;
வழக்கமான சொல் முறைகள் இல்லாமல் புதிது நோக்கி நிமிர்ந்திருக்கும் இத் தொகுப்பு , இவரது வாழ்வின் முக்கிய பதிவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.'

'என் அரக்க நிழல்கள் ' -என்ற பதமே என்னை ஆச்சர்ய படுத்துகிறது,
தொகுதி நெடுகிலும் இது போன்ற சொல்லாக்கங்களில் இனியவன் தேர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.'

'நிறைய பிரியங்களுடன் நகரத்தின் கதவுகளை நானும் திறக்கிறேன்,
உள்ளிருந்து வெளிவரட்டும் கவிதை தேவதை.'

-யுகபாரதி

பழனி பாரதி :

இனியவனின் 'நகரத்தின் கதவுகள்' கவிதை தொகுப்பை வாசித்தேன்,
'தண்ணீரைப் போல பழகும் பச்சை மனிதர்களுக்குத் தான் தெரியும் உயிர்களின் பிரியம். இனியவன் அதை உணர்ந்தவராக, இழந்தவராக, வாழ்ந்தவராக மூன்றுநிலைகளிலும் நின்று கவிதை பாடிஇருக்கிறார்.'

'மூடிகிடக்கும் நகரத்தின் கதவுகளை முட்டி திறக்க முயற்சிக்கும் இனியவனுக்கு வாழ்வின் எல்லா கதவுகளும் திறந்து வழிவிடட்டும் '

அன்புடன்
பழனிபாரதி