இதழ் இயல்

முத்தங்களை சேமித்து வைக்கும்
உண்டியலிருந்தால்
உன் முத்தங்களை சேமித்து வைத்து
நீ இல்லாத நாட்களில்
செலவு செய்து கொள்வேன்
ஆனால் அப்படி ஒரு
உண்டியல் இல்லையே...
சரி பரவாயில்லை
நீதான் ஊருக்கு போகையில்
பிரியும் நாட்களுக்கும் சேர்த்தே
கொடுத்து விட்டு போகிறாயே ...


இனிமேல்,
என்னை அருகில் வைத்துக்கொண்டு
எந்த குழந்தைக்கும் முத்தமிடாதே...
அது குழந்தை என்பதைகூட மறந்துவிட்டு
எதிரியாய் பார்க்கிறேன்


முத்தம் கேட்கும் போதெல்லாம்
மாட்டேன் என்கிறாயே
எதற்கு
நான் கெஞ்சவேண்டும் என்றா...
இல்லை கொஞ்சவேண்டும் என்றா...
ஒருவேளை நான்,
முத்தங்களே கேட்கவில்லையென்றால்
நீ முத்தங்களை வைத்துக்கொண்டு
என்னசெய்ய போகிறாய்...

அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்னசெய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம்
காயும்முன்
ஏதாவது செய்ய வேண்டும்.


உனக்கு எப்போது
பரிசு கொடுப்பதென்றாலும்
நான் முத்தங்களையே
பரிசாய் தருகிறேன்
உன் காதலுக்கு பதிலாய்
என் காதலையே கொடுப்பதை விட
வேறென்ன பெரிதாய்
என்னால் தந்துவிட முடியும்.

4 கருத்துகள்:

பாலா சொன்னது…

அருமைங்கோ

அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்னசெய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம்
காயும்முன்
ஏதாவது செய்ய வேண்டும்.

இன்னம் கொஞ்சம் அழுத்தமா சொல்லிருக்கலோமோ ?/

பாலா சொன்னது…

நண்பரே உங்க ப்ளோக்ல சொல்சரிபார்ப்பை எடுத்து விடவும் ரொம்பவும் சிக்கல்லாய் இருக்கிறது

பாலா சொன்னது…

அதே போல் உங்கள் ஜிமெயில் ஐடியை தரவும் தொடர்புகொள்ள இயலும்

SHALINIPRIYAN சொன்னது…

ஹாய் இனியவா!
நல்லா(!) இருக்கு உங்க காதல் கவிதை.
முயற்சிகள் மேலும் தொடரட்டும்.

இனிய ரம்ஜான் வாழ்த்துகளுடன்

ஷாலினி பிரியன்

கருத்துரையிடுக