நகரத்தின் கதவுகள்

எப்போதும் சாத்தியே கிடக்கிறது

நகரத்தின் கதவுகள்

செய்தி தாளுக்கோ பால் பாக்கெட்டுக்கோ

திறக்கப்படும் அவை

சட்டென அறைந்து சாத்தப் படுகிறது

எவர் முகத்திலாவது .

சக்கரை அரிசி என

உறவை எடுத்து செல்லும்

டம்பளர்கள் இங்கு

எவரிடமும் இல்லை .

தொலைகாட்சி சிறப்பு

நிகழ்ச்சிகளால் மட்டுமே

அடையாளப்படுகிறது ,

இனிப்பை பரி மாரிக்கொல்லாத

இவர்களின் பண்டிகைகள் ...

எப்போதாவது ஒலிக்கும் அழைப்புமணி

கடிதங்களுடனோ எரிவாயு வுருளையுடனோ

உறவு தவிர்த்த எதனுடனும்

காத்து நிற்கிறது ....

கூப்பிட்ட குரலுக்கு

ஊர் கூடிய தெருக்களில்

கான்கிரிட் சுவர்கள் முளைத்து

சிறையாகிவிட்டன இதயங்கள்

நகரத்தின் கதவுகளுக்குள் .

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது மட்டுமா இனியன்,ஒரு வீட்டுக்குள்,இரு தொலைபேசியில் பெசுகின்ற்றனர்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

அவரவர் வேலை அவரருக்கு ..மனித நேயம் மரத்து
போய் நீண்ட வருடங்களாகிவிட்டது..!

பா. இனியவன் சொன்னது…

நன்றி தோழி ஜெயசிலன் அவர்களே .. நன்றி வெங்கட் ..

S.A. நவாஸுதீன் சொன்னது…

ந(ரக)கர வாழ்க்கையை அழகா சொல்லி இருக்கீங்க நண்பா

கருத்துரையிடுக