ஒட்டு போட்ட கால்சட்டை

வாங்கி வராத
கணக்கு நோட்டிற்காய்
அடிவாங்கிய போதெல்லாம்
அப்பாவை சபித்திருக்கிறேன்

ஒட்டு போட்ட
கால்சட்டயின்
கிழிசலை மறைப்பதிலேயே கழியும்
தோழிகளுடனான எனது நட்பு

பள்ளியற்ற மதியங்களில்
நிம்மதி பெருமூச்சி விடுவேன்
தயிர்சாதம் குறித்த கேலியில் இருந்து
தப்பித்ததாய்

இடை வேளையில்
வெளியே செல்லாமல்
ஏதோ ஒரு புத்தகத்தை
புரட்டி கொண்டிருப்பேன்
நொறுக்குகள் வாங்க காசற்றவனாய்
காட்டிகொள்ளாமல்


ஓடியாடி விளையாடும்
நண்பர்களோடு சேராமல்
ஒதுங்கியே நிற்பேன்
நைந்து போன ஒற்றை சட்டையும்
கிழிந்து விடுமோ என்ற பயத்தில்


எல்லோரையும் போல்
ஆண்டு விடுமுறையை
அவ்வளவாய்
எதிர்ப்பார்க்க மாட்டேன்
ஏதோ ஒரு கடையில்
எடுபிடியை சேர்வதில்
எனக்கு சம்மதமில்லை

இத்தனையும் தாண்டி
தேர்வில்
வெற்றிபெற்று விடுவேன்
அப்பா மேய்க்க
விடுவதாய் சொன்ன
'பன்றி' களுக்கு பயந்தே ...

1 கருத்துகள்:

SHALINIPRIYAN சொன்னது…

ஹாய் இனியவா!
கடைதட்டு மக்களின் குழந்தைகளின் உணர்வுகளை மிக அழகாக பிரதிபலித்திருக்கிறீர்கள்.மேலும்
இது போன்ற கவிதைகளை எதிபர்கிறேன்.காதல் கவிதைகள் வேண்டாமே!ப்ளீஸ்

கருத்துரையிடுக